கொரோனா வைரஸ்‌ வந்தவுடன் பின்பற்றும் வழிமுறைகள் AFTER COVID INFECTION FOLLOWING INSTRUCTION

 உங்களுக்கு உடல்நலக் குறைவு என அறிந்தவுடன்.



பொறுமை யாக இருங்கள். நினைவில் கொள்ளுங்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட பெரும்பாலனவர்கள் குணமடைகிறார்கள் மற்றும் அவர்கள் மருதுவமைனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை.  

  •  சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். கோவிட் பரிசோதனை செய்துகொள்வதற்கோ, பரிசோதனை முடிவிற்கோ காத்திருக்க வேண்டாம்.
  •  ஆலோசனைக்கு ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.  
  •  ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது அடிக்கடி உங்களின் மூச்சு வேகமாகும் போது உங்களது ஆக்சிஜென் அளவினை பரிசோதியுங்கள்.
  • ஆக்சிமீட்டரின் ஆக்சிஜென் அளவு 94% க்கும் கீழே காண்பித்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.
  •  ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் உங்களது உடல் வெப்பநிலையை கண்காணியுங்கள். உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கண்காணியுங்கள்.
  •  3 நாட்களுக்கு உடல் வெப்பநிலை 101F (38C) தொடர்ந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.

 இந்த நிகழ்வுகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் ஒரு அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்.

  • 📍 மோசமான சுவாசக் குறைபாடு ஏற்படும்போது.
  • 📍 உதடு அல்லது முகம் நீல நிறமாகும்போது.
  • 📍 தன்னிலை இழத்தல் எனும் நிலை அதிகரிக்கும்போது.
  • 📍 மார்பு பகுதியில் தொடர் வலி அல்லது அழுத்தம் ஏற்படும்போது.
  • 📍 மந்தமான பேச்சு அல்லது வலிப்புதாக்கங்கள். 
  • 📍 எழுந்திருக்கவோ அல்லது விழித்திருக்கவோ முடியவில்லை என்ற நிலையின்போது.

குழாய் நீரைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான ஸ்பாங் செய்யவும். குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவேண்டாம்.
  • முடிந்தால் கழிப்பறையுடன் கூடிய ஒரு தனி அறையில் உங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்தி ஓய்வு கொள்ளுங்கள்.
  • ஓய்வு, ஓய்வெடுங்கள், ஓய்வு, ஓய்வெடுங்கள்.
  • புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலமும், உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வீடியோ அழைப்புகளைப் பெறுவதன் மூலமும் உங்கள் மனதை பிஸி ஆக வைத்திருங்கள்.
  • நீங்கள் அதனை உணர்ந்தால், லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் உங்கள் மூக்கு மற்றும் வாயை மறைக்கும் முகக் கவசம் அணியுங்கள். உங்கள் அறையில் நுழையும் நபரும் முகக் கவசம் அணிய வேண்டும்.  
  • முடிந்தால் காற்றோட்டதிற்காக ஜன்னல்களை திறக்கவும்.
  • உங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுங்கள். உங்களது அறையை கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு நீங்களே சுத்தம் செய்யுங்கள். 



Comments