லட்சதீவு விற்பனைக்கு , மத்திய அரசின் அடாவடி , தென் இந்தியா மக்களின் மீதான அடக்குமுறை . பிஜேபி ஆட்சி செய்யாத மாநில மக்கள் மீதான பழி தீர்ப்பு :

                  தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மக்கள் பிஜேபி ஆட்சியை வெறுப்பதால் அவர்களை சுற்றி உள்ள மற்றும் அந்த பகுதி மக்களுடன் தொடர்புடைய மக்களை பழி வாங்கும் பயமுறுத்தும் செயல்களில் மத்திய பிஜேபி அரசு செய்துவரும் அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது 

              லட்சதீவு மக்கள் மீதான அடக்குமுறை, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்த காரோண காலத்தில் மத்திய அரசு செய்து வருகிறது,    

               லட்சதீவு பல சிறிய சிறிய தீவுகளின் தொகுப்பு அதற்க்கு என்று தனி சட்ட மன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை , மேல்மட்ட அதிகாரம் கொண்டு மக்களை ஆட்சி செய்வது அங்கு உள்ள பஞ்சாயத்து அமைப்பு, அதனுடைய செயல்பாடுகளை பார்வையிட அரசால் ஐ.எ.ஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம் ஆனா ஒன்று . இவர் கேரளா நீதிமன்றத்தால் கண்காணிக்க படுபவர் . 

               அனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு தனி நபரை , அரசியல் சார்ந்த நபரை பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை தலைவராக நியமனம் செய்து அங்கு உள்ள மக்களையும் அவர்கள் பின்பற்றும் வழக்கங்களை மாற்றி அவர்களை அங்கு இருந்து ஒடுக்கி , விரட்டும் வேளையில் ஈடுபட்டுள்ளது .

          இங்குள்ள தீவுகளில் பெரும்பாலும் கேரளா சார்ந்த முஸ்லீம் மக்கள் தோன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மீது அடக்குமுறைஐ கட்டு அவிழ்த்து விட்டுள்ளது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு. 

          லட்சதீவுல் ஒரு குறிப்பிட்ட ஓர் தீவில் மட்டும் மதுபானம் வெட்கப்படும் அந்த சட்டத்தை நீக்கியே பார் காலை தெறந்து கார்பொரேட் கு விற்க அனுமதி தரப்பட்டுள்ளது அணைத்து தீவுகளிலும் . 

             அங்குள்ள பூர்வகுடி மக்கள் மட்டுமே இங்குள்ள நீலபகுதிகளை வாங்க முடியும் அந்த சட்டம் தற்பொழுது நீடிக்க பட்டுள்ளது , இதன்முலம் யார் வேண்டும் என்றாலும் இங்குள்ள நிலங்களை வாங்க முடியும், ஏந்த கார்பொரேட் நிறுவனமும் இஙகுநிலங்களை வாங்க முடியும், அவர்கள் தொழில் தொடங்க முடியும் அந்த பகுதியின் மாண்புகளை அழிக்கலாம். 

         இங்குள்ள கனிம வளங்களை எடுத்து தொழில் தொடங்கலாம், கார்பொரேட் நிறுவனங்கள் அந்த டெண்டர்களை பெற்று கனிம சுரண்டலில் ஈடுபலலாம் , இது போன்ற சட்ட திருத்தம் குறிப்பிட்ட அதானி நிறுவனதிற்கு சாதகமாக இருக்கும் என சந்தேகிக்க முடிகிறது .

        இங்குள்ள மக்கள் மாட்டு இறைச்சிகளை உன்ன கூடாது என்றும் அது தடை செய்ய பட்டது என்றும் புதிய சட்டம் சொல்லுகின்றது, பிஜேபி அரசின் ஹிந்துத்துவ அரசியலை புகுத்தும் செயல். 

        இங்குள்ள லட்சத்திவு கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, விவசாயம், சுகாதாரத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகள் எல்லாம் முன்பு மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரத்தின் கீழ் இருந்தன. மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான மானியம் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டே இருந்தது. இவை அனைத்தையும் அட்மினிஸ்டேட்டரின் அதிகார வரம்பிற்குள் மாற்றியுள்ளார் பிரஃபுல் கோடா பட்டேல்.


        அதுமட்டுமல்லாது லட்சத்தீவில் சாலை ஓரங்களில் உள்ள அனைத்து தென்னை மரங்களிலும் காவி வண்ணம் பூச வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக கிரிமினல் குற்ற வழக்குகளில் பெரிய அளவில் யாரும் சிறைக்குச் சென்றதில்லை. சைக்கிளில் லைட் இல்லாமல் சென்றது, பைக்கில் மூன்றுபேர் பயணித்தது போன்ற வழக்குகள்தான் அங்குள்ள கோர்ட்டில் பதிவாகியுள்ளதாக கூறுகின்றனர் தீவு வாசிகள். ஆனால், அட்மினிஸ்டேட்டரை எதிர்ப்பவர்களை கைது செய்வதற்காக குண்டாஸ் ஆக்ட் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீவுவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

          லட்சத்தீவுகளின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என சட்டம் பிறப்பித்துள்ளார்.

             மேலும் முன்களப் பணியாளர்களான செவிலியர்கள் குறைந்தபட்ச ஊதியத்துக்காக போராடிய போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் கைது செய்துள்ளனர் அம்மாநில ஆளுநர் தலைமையிலான போலிஸார். செவிலியர்களின் கைது நடவடிக்கைக்கு பிறகு ஜனவரி வரை கொரோனா இல்லாத தீவாக இருந்த இங்கு 5000 பேருக்கு மேல் தற்போது கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

          இந்த முறைகேடுகளையும் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரஃபுல் பட்டேல் மாற்றவேண்டும் என முறையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட, டாட்ரா நாகர் ஹவேலி நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் டேல்கர் பல இன்னல்களுக்கு ஆளாகி, கடந்த பிப்ரவரி 21ம் தேதி டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

             தனது தற்கொலை முடிவுக்கு பிரஃபுல் பட்டேல்தான் காரணம் என 15 பக்க அளவில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்த தற்கொலை வழக்கு, எப்.ஐ.ஆரில் தற்போது வரை பிரஃபுல் பட்டேல் சேர்க்கப்படவில்லை. மேலும் தன்னுடைய ஆளுநர் பதவியை வைத்து இந்த வழக்கிலிருந்து அவர் தப்பிக்க ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

          இந்த மத வாத மத்திய அரசிடம் இருந்து லட்சதீவு காப்பாற்றபடுமா என்பது புதிராக உள்ளது, ஜம்மு காஸ்மீர் ஐ தொடர்ந்து காரோண காலத்தில் பிஜேபி அரசால் எடுக்கப்படும் அடக்குமுறைகளில் இதுவும் ஒன்று. 

                                                                        தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மீடியா 

advertisement : www.srinarayaniconstruction.com 

registered construction company in tamilnadu 


Comments