ஒரே ஒரு வாத்தியார் ஒரே ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டது குத்தமாயா? என்று கேட்கிறார். இதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பு என்று கேட்கிறார். PSBB SCHOOL ISSUE IN CHENNAI

 


ஒரே ஒரு வாத்தியார் ஒரே ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டது குத்தமாயா? என்று கேட்கிறார். இதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பு என்று கேட்கிறார்.


ஆனால் அந்த ஒரு வாத்தியார் தான் அந்த பள்ளியில் பாலியல் புகார்களை விசாரிக்க அந்த பள்ளி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட வாத்தியார். பாலியல் குற்றம் செய்பவரை அந்த பதவியில் நியமித்தது அந்த பள்ளி நிர்வாகத்தின் தவறு தானே. 

அனைவரும் பார்ப்பார்கள் என்று தெரிந்தும் குளித்து முடித்து துண்டு கட்டிக் கொண்டு ஆன்லைன் வகுப்புக்கு வரும் அளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்தது அந்த பள்ளி நிர்வாகம் தானே. 


இதை எல்லாம் விட பள்ளி நிர்வாகம் பிராமணர்கள் என்பதால் அவர்கள் மீது குற்றமே சொல்ல கூடாது என்ற அந்த திமிர் பிடித்த எண்ணம் தானே இதை எல்லாவற்றையும் விட கொடுமையான குற்றம்.


தங்கள் பள்ளிக்கு இப்படியொரு சிக்கல் வந்து சேருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் ஓய்.ஜி.எம் குடும்பத்தினர்.



சென்னையின் மிக முக்கிய கல்வி அடையாளங்களில் ஒன்றும் பிராமணர்களின் பிரஸ்டீஜ் ப்ராப்பர்டிகளிலும் ஒன்றான பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி ஆசிரியரான கோவிந்த வரதாச்சாரி ராஜகோபால் என்பவர் மீது ஒரே நாளில் அடுக்கடுக்காக எழுந்த பாலியல் சீண்டல் புகார்கள் வரிசையாக சமூக வளைதளங்களில் பகிரப்படவும் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயிருக்கின்றனர் ஓய்.ஜி.எம் குடும்பத்தினர்.


செய்தி வெளியான உடன் தன்னளவில் தனிப்பட்ட முறையில் செய்தியை விசாரித்த நடிகர் ஓய்.ஜி.மகேந்திரா, இது ஒரு நீண்ட நாள் சிக்கல் என்றும், ஒரு சில ஆசிரியர்கள் தாங்கள் குறிவைக்கும் மாணவிகளுக்கு வசதி படைத்த மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க வைத்து, ஸ்பெசல் கிளாஸ் என்று விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவைத்து அவர்கள் அசந்தர்ப்பமாக இருக்கும் நேரத்தில் படம் பிடித்து மிரட்டி தங்கள் பாலியல் தேவைகளை தணித்துக் கொண்டதையும், அப்படியான சில படங்களையும் வீடியாேக்களையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டதையும் உறுதி செய்துக்கொண்டப் பின்னர், தனக்கும் பள்ளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லையென்ற அறிவிப்பை வெளியிட்டார். 


குடும்ப பாகப்பிரிவினையில் பள்ளியின் உரிமம் முழுவதும் தன் தம்பிக்கு போய்விட்டாலும் தான் அதில் ஒரு ட்ரஸ்டியாக மட்டுமே தொடர்வதாக ஒப்புக்கொண்டார்.


அடுத்தடுத்து குடும்ப உறவுகள் தன்னை முற்றுகையிட நம்ம குடும்பத்துக்கு என்று இந்த சமூகத்திலிருந்த மதிப்பை இந்நிகழ்வு சிதைத்துவிட்டதாக பொரிந்து தள்ளியிருக்கிறார்.


இது அரசியல் பழிவாங்கல் என்று மகள் மதுவந்தி சொன்னதும் அவரிடம் சீறிய மகேந்திரா, அது உண்மையல்ல என்றும் புகார்களை தானே விசாரித்துவிட்டப் பின் தன்னிடம் பொய் சொல்வதில் அர்த்தமில்லை என்றும் அவர் வாயை அடைத்திருக்கிறார்.



தனக்கென இருந்த சர்வக்கட்சி தொடர்பை மகளுடைய நேரடி பாஜக சார்பு நடவடிக்கைகள் கெடுத்துவிட்டதையும் சொல்லி புலம்பியிருக்கிறார்.


நேரடியாக தான் தலையிடாமல் யார் மூலம் பேசலாம் என்று தவித்தவருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நினைவு வந்திருக்கிறது. 


இரவோடு இரவாக அவரை தொடர்புக்கொண்ட போது, தனக்கும் புதிய அரசுக்கும் தொடர்பே இல்லையென்றும் தன்னால் ஆகப்போவது ஏதுமில்லை என்று கைவிரித்திருக்கிறார் கிரிஜா.


இருக்கவே இருக்கிறார் ரஜினி என்று அவரை அழைத்ததற்கு, இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும், இனி எதற்காகவும் யாருக்காகவும் எந்த அரசியல் கட்சி தலைவரையும் தொடர்புக்கொள்ளும் மனநிலையில் இல்லையென்றும், குறிப்பாக ஆட்சியமைத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மு.க.ஸ்டாலினுடன் பேசுவது முறையாக இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.


இதன் பின்னரே தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, பள்ளியின் நிர்வாகத் தலைமையிலிருப்பவர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை  தன்னுடைய கோரிக்கையாக்கி நள்ளிரவில் இமெயில் அனுப்பியிருக்கிறார் மகேந்திரா.


இதற்குள் தன்னுடைய பாஜக வட்டாரத்தை தொடர்புக்கொண்ட மதுவந்தி பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர் பிராமணர்கள், குறிப்பாக மிடில் கிளாஸ் மாணவிகள் தான் என்பதை மேற்கோள்காட்டி அவர்களை தங்கள் சமூகத்து முக்கியப் பிரமுகர்கள் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியை முடுக்கிவிட்டிருக்கிறார். இதற்காக எத்தனை செலவு செய்யவும் தான் தயாராக இருப்பதையும் தெரிவித்திருக்கிறார்.


மொத்தத்தில் ஜக்கி வாசுதேவ், ஹெச்.ராஜா, பத்மா சேஷாத்திரி என்று நடப்பவை யாவும் தங்கள் சமூகத்தின் அதிகார பிம்பத்தை உடைத்து வருவதாகவும், இதை சரி செய்ய விரைவில் ஒரு சத்ருசம்ஹார யாகத்தை செய்ய வேண்டும் என்றும் தங்களுக்குள்  பேசிக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.



மத்தியரசு கொரோனா விவகாரத்தில் சர்வதேச சிக்கலில் தவித்துக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டு விவகாரங்களை எடுத்துப் போக முடியாமல் தவிக்கும் தமிழக பாஜக, அடுத்து என்ன பூகம்பம் கிளம்புமோ என்ற பீதியில் தவித்துக்கொண்டிருக்கிறது.


Comments